Dr. ROY MEDICAL HALL
Jaffer Khan Colony | Calicut | Kerala | IndiaSexologist Doctor - Sexology Clinic
+91 9349113791
சீக்கிரமே விந்து வெளியாதல் பிரச்சினை உள்ள ஒரு நபர், தன்னுடைய ஆண்மை குறித்து தனக்குள் அடிக்கடி வினா எழுப்பிக்கொள்கிறார் மேலும் தன்னுடைய பாலுறவு செயல்பாடுகள் மீது தன்னம்பிக்கை இழக்கிறார். இது அடிக்கடி தாழ்ந்த சுய மரியாதை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது.
சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது எல்லா வயது தரப்பு ஆண்களிடத்திலும் ஏற்படுகிறது. "சீக்கிரமே விந்து வெளியாதல்" அல்லது "துரித ஸ்கலிதம்" எனப்படுவது ஒரு ஆண் தான் விரும்புகிற நேரத்திற்கு முன்னதாகவே விந்து வெளியேற்றுவதைக் குறிக்கிறது அல்லது அவ்வாறு முன்னதாக விந்து வெளியேறுவதை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை அல்லது தாமதப்படுத்த முடியாத இயலாமையைக் குறிக்கிறது.
சீக்கிரமே விந்து வெளியாதல் பிரச்சினை உள்ள ஒரு நபர், தன்னுடைய ஆண்மை குறித்து தனக்குள் அடிக்கடி வினா எழுப்பிக்கொள்கிறார் மேலும் தன்னுடைய பாலுறவு செயல்பாடுகள் மீது தன்னம்பிக்கை இழக்கிறார். இது அடிக்கடி தாழ்ந்த சுய மரியாதை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், இந்த அனுபவத்தின் காரணமாக, துணைவர்கள் இருவருமே தங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுமோ என்றும் தங்கள் திருமண வாழ்வில் மேலும் அதிகமாக பாலியல் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்றும் எதிர்மறையான உணர்ச்சிகளால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையானது சுய இன்பம் அனுபவித்தல், அல்லது மற்றொரு நபருடன் பாலுறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட எல்லா பாலுறவு சூழ்நிலைகளிலும் ஏற்படக்கூடும்.
கட்டுக்கதைகள் & உண்மைகள்
Myths & Facts
கட்டுக்கதை: மது அருந்துதல், கோகெய்ன் உட்கொள்ளுதல், மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை சீக்கிரமே விந்து வெளியாதலை கட்டுப்படுத்த சிறந்த வழிகள் ஆகும்.
உண்மை: இத்தகைய மருந்துகள் சீக்கிரமே விந்து வெளியாதலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படவேண்டியவை அல்ல. அவை உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பான மருந்துகளும் அல்ல.
கட்டுக்கதை: உணர்வு நீக்கி தெளிப்பான்கள் (Anesthetic sprays) அல்லது கிரீம்கள் (creams) போன்றவை சீக்கிரமே விந்து வெளியாதலை கட்டுப்படுத்த சிறந்த வழிகள் ஆகும்.
உண்மை: இத்தகையப் பொருட்கள் சீக்கிரமே விந்து வெளியாதலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படவேண்டியவை அல்ல. அவை ஆண் உறுப்பின் தலைப்பகுதியையும் மற்றும் பெண்ணுறுப்பையும் உணர்ச்சியற்றுப் போகச் செய்கின்றன. இதனால் இரு துணைவர்களும் பாலுறவில் உண்மையான மகிழ்ச்சி அடையமுடியாமல் போகிறது. அவை ஆண் உறுப்பின் தலைப்பகுதியை உணர்ச்சியற்றுப் போகச் செய்வதால், நீங்கள் நீண்ட நேரம் உண்மையான காதல் சுகத்தை "தானாகவே பெறுகின்ற” கிளர்ச்சி நிலையை ஒருபோதும் அடைய முடியாமல் போகிறது. மேலும் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தியபிறகு மீண்டும் "பழைய குருடி கதவைத் திறடி” என்கிற சோக நிலையே தொடரும்.
கட்டுக்கதை: சீக்கிரமே விந்து வெளியாதல் என்கிற பிரச்சினை உள்ளவருக்கு அதனைத் தொடர்ந்து ஆண் உறுப்பு எழுச்சி பிரச்சினைகள் ஏற்படாது.
உண்மை: தங்கள் விந்து வெளியேற்றத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆண்களைக் காட்டிலும் நீண்ட காலமாகவே சீக்கிரமே விந்து வெளியாதல் பிரச்சினை உள்ள ஆண்கள் பிற்காலத்தில் அதிக எண்ணிக்கையில் ஆண் உறுப்பு எழுச்சி பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. காரணம் என்னவெனில், பாலுறவின் போது ஆண் உறுப்பு எழுச்சியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிக நேரம் நம்மால் பராமரிக்க முடிகிறதோ அந்த அளவுக்கு, நம்முடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் நாம் ஆண் உறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாகும்.
கட்டுக்கதை: சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது ஆண் உறுப்பு எழுச்சி பிரச்சினைகள் உருவாகப்போகிறது என்பதற்கான ஒரு அறிகுறி அல்ல.
உண்மை: சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது ஆண் உறுப்பு எழுச்சி பிரச்சினைக்கு முதலாவது அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
கட்டுக்கதை: சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது உங்கள் பாலுறவு வாழ்க்கையை பாதிக்காது.
உண்மை: நீங்கள் பாலுறவில் ஈடுபட்டிருக்கும் வேளையில், விந்து வெளியேறிவிடுமோ என்று நீங்கள் அடிக்கடி கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள், இதனால் நிதானத்துடனும் முழு மகிழ்ச்சியுடனும் தாம்பத்ய உறவில் உச்சம் காண முடியாது. மேலும், உங்கள் துணைவர் பாலுறவு வாழ்க்கையில் முழு இன்பத்தை பெற முடியாமல் போகலாம், இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் உங்களுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதை தவிர்க்கவும் வாய்ப்புள்ளது.
மருத்துவ வரையறை
The Medical Definition
சீக்கிரமே விந்து வெளியாதல் குறித்த மருத்துவ வரையறை யாதெனில், ஆண் தனது உறுப்பை பெண் உறுப்புக்குள் நுழைக்கிற நேரத்திலோ அல்லது நுழைத்த பின் சிறிது நேரத்திலோ, மேலும் ஆண் விரும்புகிற காலத்திற்கு முன்னதாகவோ குறைந்தபட்ச பாலுறவு தூண்டுதலிலேயே விந்து வெளியேற்றப்படுகிற நிகழ்வு தொடர்சியாக பல பாலுறவு சேர்க்கையின் போதும் மீண்டும் மீண்டும் நடப்பது வாடிக்கையாகிப் போவதை குறிப்பதாகும்.
சாதாரணமாக சொல்வதெனில்,சீக்கிரமே விந்து வெளியாதல் என்பதை பின்வருமாறு வரையறுக்கலாம்:
ஒருவர் தன்னுடைய விந்து வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இயலாமை.
அவர் விரும்புவதற்கு முன்னதாகவோ அல்லது தனது துணைவரை திருப்திப்படுத்துவதற்கு முன்னதாவோ விந்தை வெளியேற்றுதல்.
பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பை நுழைப்பதற்கு முன்னதாகவோ அல்லது நுழைத்த சில நிமிடங்களிலோ விந்தை வெளியேற்றுதல்.
சீக்கிரமே விந்து வெளியாதல் எந்தளவு பொதுவாகக் காணப்படுகிறது?
சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது, பாலுறவில் சிறப்பாக ஈடுபடக்கூடியவராக விளங்குகிற பத்து நபர்களில் மூன்று பேர் இந்தப் பிரச்சினையால் அவதியுறுவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.
சீக்கிரமே விந்து வெளியாதல் எதனால் ஏற்படுகிறது?
சீக்கிரமே விந்து வெளியாதல் என்கிற இடர்வரவை பின்வரும் பல்வேறு காரணிகள் அதிகப்படுத்தக்கூடும்:-
ஆண்மையின்மை: நீங்கள் எப்போதாவதோ அல்லது தொடர்ந்து ஒரே சீராகவோ ஆண்மையின்மையை அனுபவிக்கிற பட்சத்தில் சீக்கிரமே விந்து வெளியாதல் என்கிற இடர்வரவுக்கான வாய்ப்புகள் அதிகரித்த நிலையில் நீங்கள் இருக்கலாம். உங்கள் ஆண் உறுப்பு எழுச்சியை நீங்கள் இழந்துவிடுவீர்களோ என்கிற பயம் உங்களுக்குள் ஏற்பட்டு அதன் காரணமாக அவசர கதியில் நீங்கள் பாலுறவில் ஈடுபடக்கூடும்.
உடல்நலப் பிரச்சினைகள்: இதயப் பிரச்சினை போன்ற மருத்துவ கவலை உங்களிடம் இருக்கிற பட்சத்தில், அதன் காரணமாக பாலுறவின்போது நீங்கள் பதற்றமைடைந்து, சீக்கிரமாக விந்து வெளியேற வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம்.
மன அழுத்தம்: உங்கள் வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்ட நிலை அல்லது மன அழுத்தம் இருக்கிற சூழ்நிலையில் அது சீக்கிரமே விந்து வெளியாதலில் முக்கியப் பங்கு வகிக்கலாம். அதாவது பாலுறவில் ஈடுபடும் போது நீங்கள் நிதானத்துடனும் முழு கவனத்துடனும் ஈடுபடுவதை அவை தடுக்கக்கூடும்.
சில குறிப்பிட்ட மருந்துகள்: அரிதாக, மூளையில் உள்ள இராசயன தூது உட்கருஅமிலங்களின் (உள நிலைமாற்றிகள்) செயல்பாடுகளின் காரணமாக சீக்கிரமே விந்து வெளியாதல் ஏற்படக்கூடும்.
அதிக உணர்தன்மை: பாலுறவின் போது அதிக உணர்தன்மை கொண்ட சிசின் மொட்டு (அல்லது ஆண் உறுப்பின் தலை) மற்றும் படபடப்பு அல்லது செயல்பாட்டு பதற்றம் ஆகியவற்றின் கலவை காரணமாக ஏற்படுகிறது.
அச்சம்: ஏற்கனவே சீக்கிரமே விந்து வெளியாதல் நடைபெற்ற அனுபவத்தின் காரணமாக இந்த அச்சம் பெரும்பாலும் எழுகிறது.
தடுத்தல்
Prevention
சில நேர்வுகளில், துணைவர்கள் இடையேயான மிகக்குறைந்த தொடர்பாடல் அல்லது ஆண் மற்றும் பெண் பாலுறவு செயல்பாடுகள் மீதான துணைவர்கள் இடையே உள்ள மிகக்குறைந்த புரிந்துக்கொள்தல் காரணமாக சீக்கிரமே விந்து வெளியாதல் ஏற்படக்கூடும். உச்சகட்டம் அடைவதற்கு ஆண்களை விட பெண்களுக்கு வழக்கமாக நீண்ட நேர தூண்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இந்த வித்தியாசம் துணைவர்கள் இடையே பாலுறவு கொள்ளும்போது கோபத்தையும் இன்னும் அதிகமாக அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். பல ஆண்களுக்கு, பாலுறவின் போது அழுத்தத்தை உணர்வது சீக்கிரமே விந்து வெளியாதல் இடர்வரவை அதிகரிக்கிறது.
பாலுறவு துணைவர்கள் இடையே மனம்திறந்த தொடர்பாடல், பாலுறவின் போது வெவ்வேறு நிலைகளை கைக்கொள்தல் போன்றவற்றின் காரணமாக அவர்கள் திருப்தியடையவும் பிணக்கு மற்றும் செயல்பாட்டு பதற்றம் குறைக்கவும் வழிவகுக்கும். உங்கள் பாலுறவில் நீங்கள் திருப்தி அடையாத பட்சத்தில், உங்கள் கவலைகள் பற்றி உங்கள் துணைவருடன் மனம்விட்டு பேசவும். உங்கள் திருப்தியின்மைக்காக உங்கள் துணைவரை பழித்து பேசுவதை தவிர்த்து இந்த பிரச்சினையை அன்பான முறையில் அணுக முயற்சிக்கவும்.
சீக்கிரமே விந்து வெளியாதல் பிரச்சினை உள்ள பல ஆண்கள் விரக்தி அடைந்தவர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் அவமானம் நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை பொதுவாகக் காணப்படுகின்ற ஒன்று என்றும் சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடியது என்றும் உங்களுக்கு உதவக்கூடிய அளவுக்கு இந்தத் தகவல்கள் அமைந்திருக்கும். பாலியல் பிரச்சினைகளை உங்களால் சொந்தமாகவே தீர்க்க முடியாத பட்சத்தில், அது உங்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிற பட்சத்தில், உங்கள் மருத்துவரிடம் மனம்விட்டு பேசவும். அவர் நீங்களும் உங்கள் துணைவரும் ஒரு முழுமையான திருப்திகரமான பாலுறவு இன்பத்தை பெறுவதற்கு உங்களுக்கு உதவுவார்.
சீக்கிரமே விந்து வெளியாதல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா?
இரண்டு முக்கிய காரணங்களுக்காக அது தீர்க்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது:-
முதலாவது
பாலுறவின் போது பெரும்பாலான நேரம் உங்கள் மனமெல்லாம் சீக்கிரமே விந்து வெளியேற்றப்படுவதை தாமதப்படுத்துவதில் அல்லது உங்கள் விந்து வெளியேற்றத்தை தடுப்பதிலேயே குறியாக இருப்பதால் நீங்கள் பாலுறவின் உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போகிற அவலநிலை ஏற்படுகிறது. மேலும், கூடுதல் சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு திருப்தியடையாத துணைவர் அமைதியாக இருக்கும் நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. சீக்கிரமே விந்து வெளியாதல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு காதல் களியாட்ட தருணங்கள் போதுமான அளவுக்கு நீண்ட நேரம் நடைபெற்றால்தான் நீங்கள் மற்றும் உங்கள் துணைவர் இரண்டு பேரும் உச்சகட்டத்தை அடைந்து மேலும் அதிகமாக மகிழ்ச்சியடைகிற ஒரு பாலுறவு வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
இரண்டாவது
சீக்கிரமே விந்து வெளியாதலுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிற ஒரு பிரச்சினையாக மாறிவிடும். ஒருசில காதல் களியாட்ட தருணங்கள் சிறிதளவு நீடித்து நடைபெற்றாலும் கூட, அடிப்படையில் பிரச்சினையானது அப்படியே நீடிக்கிறது, அதாவது காதல் இன்பத்தை மனதார அனுபவிக்க விடாமல் முட்டுக்கட்டை இடுகிறது என்பதுதான் உண்மை. அதன் விளைவாக சில ஆண்கள் அந்தரங்கமான உறவுகளை அல்லது நெருக்கமாக பழகுவதை தவிர்க்க முயல்கிற அதேவேளையில், மற்ற சிலர் தமது துணைவருடன் காதல் கொள்வதை அல்லது வேறு வடிவங்களிலான அந்தரங்க நெருக்கத்தை முற்றிலுமாக தவிர்க்கவும் முயல்கின்றனர், இதனால் துணைவர்களுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் உண்டாகிறது. ஆகையால், சீக்கிரமே விந்து வெளியாதல் உங்கள் பாலுறவு வாழ்க்கையை அல்லது உங்கள் உறவு தொடர்பை பாதிக்கிற பட்சத்தில், அல்லது பாலுறவின் போது மனம்பூரிக்கிற முழுமையான திருப்தியை நீங்கள் அடைய விரும்புகிற பட்சத்தில், அப்போது நீங்கள் நிச்சயமாக சிகிச்சையை நாடவும். எனினும், எல்லாவற்றுக்கும் மேலாக சீக்கிரம் விந்து வெளியாதல் எளிதில் சிகிச்சை அளித்து (வழக்கமாக ஒரு ஆலோசனை அமர்வே தேவைப்படுகிறது) குணப்படுத்தக் கூடிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டபின் இந்தப் பிரச்சினை திரும்பவும் நிகழ்வதற்கான சாத்தியமில்லை என்றே கூறலாம்.
மருத்துவ அறிவுரையை எப்போது நாடவேண்டும்?
நீங்கள் பெரும்பாலான பாலுறவு நிகழ்வுகளின் போது வழக்கத்தைவிட சீக்கிரமாக விந்து வெளியேற்றுகிற பட்சத்தில் உங்கள் மருத்துவருடனும் உங்கள் துணைவருடனும் மனம்விட்டு பேசவும். இந்தப் பிரச்சினை பொதுவாகக் காணப்படுகிற ஒன்றேயாகும், எனினும் நீங்களாகவே இதை சரிசெய்ய முடியும் அல்லது நீடித்த திருப்திகரமான பாலுறவு வாழ்க்கையைப் பெற மருத்துவச் சிகிச்சை உங்களுக்குத் தேவைப்படலாம்.
Counselling for real sexual experience |
Human remain sexually active till 90's |
Frequently Asked Questions |
Online Consultation Form |
MOBILE
+91 93491 13791
+91 88484 73488
Ejaculation timing is not related to the length of intercourse duration. The act of ejaculation stands with a number of strokes and during Sexual intercourse, a healthy person can effortlessly go between 150 to 300 strokes after penile penetration in a vagina.
Click for Online Consultation Form
|